பேஸ்புக் ஊடாக மோசடி!! – முல்லைத்தீவு வந்து பிடித்த நோர்வேப் பெண்!!

பேஸ்புக் ஊடாக நோர்வே நாட்டுப் பெண் ஒருவரை நண்பியாக இணைந்து அவரிடமிருந்து நூதன முறையில் 32 இலட்சம் ரூபா பணத்தை மேசடி செய்தார் என்று கூறப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி நோர்வேயைச் சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பேஸ்புக் ஊடாக நோர்வே நாட்டுப் பெண் ஒருவரை நண்பியாக இணைந்து அவரிடமிருந்து நூதன முறையில் 32 இலட்சம் ரூபா பணத்தை மேசடி செய்தார் என்று கூறப்படுகின்றது.

பணத்தை இழந்த பெண் நோர்வேயில் இருந்து இலங்கை வந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். தான் பணம் அனுப்பியமைக்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மல்லாவியில் வைத்து சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

Post Comment