இன்று 17th of may நோர்வேயின் தேசிய தினம்!

இன்று 17th of may நோர்வேயின் தேசிய தினம்! அதிலும் இன்று அவர்களின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதி இருநூறு ஆண்டுகள் நிறைவுநாள் ,எட்ஸ்வொல் என்ற இடத்தில அவர்களின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதிய 17th of may நாளை நோர்வே மக்கள் தங்களின் சுதந்திர தினம் போல அனுசரிகுரார்கள்.

ஐரோப்பாவில் பல நாடுகளில் “சுதந்திர தினம்” வெகு விமர்சையாக,ஆடம்பரமாககக் கொண்டாடப்பட்டாலும், இங்கே,நோர்வேயில், அதை “அடக்குமுறை விடுதலை தினம்போல” உணர்வாகக் கொண்டாடுவார் நோர்வேயியர்கள்!

தலை நகரம் ஒச்லோவிலும் ,நாடு முழுவதிலுமே , வயது,பால்,வேறுபாடு இல்லாமல் , பூர்விகமான இன மாண அடையாளமான அவர்களின் “புன்ணட்” என்ற கலாசார உடை அணிந்து,சிறுவர்கள் ,அணிவகுத்து “விடுதலை எங்கள் உசிர் மூச்சு ” என்று வீதியெங்கும் , பூமி அதிர கோசமெழுப்பி, அரசரின் அரண்மனையை சுற்றி வருவார்கள் !

இந்தளவு உசிர் மூச்சாக விடுதலை இங்கே ஒலிப்பதுக்கு ஒரு சோகமாண வரலாற்றுக் காரணம் எல்லா நோர்வேயிர்களிடமும் இருக்கிறது! சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்து இருப்பது அவர்களின் இன்றைய விடுதலைக் கொடி அசைப்புக்களில் எப்பவுமே எதிரொலிக்கும்.

நோர்வேயை பல வருடம் அதன் தெற்கே இருக்கும் குட்டி அயல் நாடான டென்மார்க் காலனிபோல ஆண்டு அதன் இயற்கைக் கனிய வளங்களை முடிந்த மட்டும் சுரண்டியபின், அருகில் கிழக்கே இருக்கும் ,நோர்வே போலவே பரபளவுள்ள ஸ்வீடனிடம் கொடுக்க ,ஸ்வீடன்காரரும் மிச்ச சொச்ச கனியவளங்களை சுரண்டி அள்ளிக்கொண்டு போனது மட்டுமல்ல, இரண்டாம் உலக யுத்தத்தில் ,”நடுநிலை ” வகிக்கிறோம் எண்டு பம்மாத்து விட்ட ஸ்வீடன் ஹிட்லரின் நாசிப் படைகள், ஸ்வீடனுக்குள்ளாள நோர்வேயிட்க்கு வந்து நோர்வேயை நாசம் செய்ய மறைமுகமாக சதி செய்தார்கள் !

நோர்வேயை ஆக்கிரமித்த ஹிட்லரின் நாசிப் படைகள், நாட்டின் வடக்கு ,மேற்க்கு, வடமேற்க்கு நகரங்களை நெருப்பு பத்தவைத்து சாம்பல் ஆக்கி, அவர்களில் பூர்வீக வாழ்விடங்களை அடியோடு தரைமட்டம் ஆக்கி,நோர்வேயில் வசித்த ஒண்டும் அறியா அப்பாவி ஜுதர்களை ,கொத்துக் கொத்தாக கைது செய்து , போலந்துக்கு அனுப்பி ,அவர்களின் ஜூத ஒழிப்பு “ஒச்விச்” என்ற விசவாயு அறையில் தள்ளி கொத்துக் கொத்தாக எமலோகம் அனுப்பினார்கள்!

நோர்வேயிடம் அப்போது பெரிய ராணுவப் படை அமைப்புக்கள் இருக்கவில்லை, அதால நோர்வே நாட்டு அரசர் பயத்தில நாட்டை ” அம்போ” எண்டு விட்டுபோட்டு இங்கிலாந்து ஓட , உள்ளுரில் இருந்த மக்கள், வேட்டை துப்பாக்கி,சிறிய ஆயுதங்களால், ஹிட்லரின் நாசிப் படைகள கடைசிவரை எதிர்த்து வீரமுடன் போராடி வீரச்சாவடைந்தார்கள்!

இவளவு வெளி ஆட்கள் அநியாயம் செய்தபோதும் “அடக்கம் உடையர் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்” எண்டு பொறுமை காத்த நோர்வேயியர்களுக்கு ,ஆண்டவன் ,அறுபதுக்களில் ” ஓடுமீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு ” என்பதுபோல அவர்களின் ,மேட்க்குகரை ” North Sea ” என்ற வட அத்திலாந்திக் கடலில் , அபரிமிதமாக நிலத்தடிஎரிவாயுவையும்,பெற்றோளியதையும் அள்ளிக் கொடுக்க, இண்டைக்கு நோர்வே, உலக அளவில் ஒரு பணக்கார நாடு!

ஒரு வேலையும் செய்யாமலே , நூரு வருடங்களுக்கு ,காலுக்கு மேல காலைப் போடுக்கொண்டு,அதை ஆடிக்கொண்டு ஸ்திரமாக இருக்கக் கூடிய ” தேசிய வருமானம் ” இருக்கிறது இந்த நாட்டிடம் !

அப்படி இருந்தும், சத்தமே இல்லாமல், அடக்கமாக , தங்களின் தேசிய வருமானதின் கணிசமான பகுதியை , ஏழை ,வறிய நாடுகளின் அபிவிருத்திக்குக் கொடுக்கிரார்கள் இதயதில ஈரம் உள்ள நோர்வேயியர்கள் !.

இப்ப நீங்களே சொல்லுங்க அவர்கள் தன்களின் அரசியல் அமைப்பு எழுதிய நாளை சுதந்திர தினம் போலவும், இன்னொரு படி மேலே போய் “அடக்குமுறை விடுதலை தினம்போல” உணர்வாகக் கொண்டாடுவதில அர்த்தம் இருக்குதா இல்லையா?.
.

Post Comment