பிரித்தானியாவில் நெல்லியடி சுரேஸ் வரலாற்றுச் சாதனை

பிரித்தானியா கரோ பகுதியில் மேயராக இருந்த சுரேஸ் கிஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் மீண்டும் அமோக அதிகூடிய வாக்குகளால் மானகரசபை சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவருடைய மனைவியார் சசி சுரேஸ் அவர்களும் மீண்டும் மானகரசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவாகி உள்ளது.

கணவன் மனைவி இருவரும் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

இலங்கையில் பாராளுமண்ற தேர்தல் காலத்தில் யாழுக்கு வருகைதந்த மேயராக இருந்த சுரேஸ் கிஷ்ணா பல்வேறு அபிவிருத்தி வேலைகள் செய்தவர் என்பது குறிப்பிடதக்கது.

பிரித்தானிய வரலாற்றில் இலங்கை தமிழ் குடும்பம் கணவன் மனைவியாக ஒரே கட்சியில் ஒரே தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றமை சரித்திரத்தில் இடம்பெறாத சாதனைகளாக கருதப்படக்கூடியது.

இவர் ஈழத்தில் நெல்லியடியை சேர்ந்தவர் புலம் பெயர்ந்து லண்டன் கரோ பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது மனைவி யாழ் நீர்வேலி பகுதியை பிறப்பிடமாக உடையவர்.

Post Comment