தமிழ் நோர்வே வள ஒன்றியமும் இனைந்து வாகநேரியில் ஒரு கோடி ரூபா செலவிலான வைத்தியசாலை

தமிழ் – நோர்வே வள ஒன்றியமானது மட்டுஆயர் அவர்களால் 2017ம் ஆண்டு வைகாசி திங்கள் ஒஸ்லோ மாநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியுள்ள மூன்று பாரிய வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது சகோதர நிறுவனமான அஹிம்சா நிர்வாக உறுப்பினர்களுடன் ஆயரின் ஆசிபெற்று வேலைகள் ஆரம்பமாகின.

அஹிம்சா சமூக நிறுவனம் மற்றும் தமிழ் நோர்வே வள ஒன்றியமும் இனைந்து வாகநேரியில் ஒரு கோடி ரூபா செலவிலான வைத்தியசாலை ஒன்றை கட்ட அடிக்கல் நாட்டு விழா 26.03.2018
***************-**************
நோர்வே தமிழ் வள ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அஹிம்சா சமூக நிறுவனத்தின் ஊடாக வாகநேரி கிராமத்தில் ஒரு கோடி ரூபா செலவில் வைத்தியசாலை ஒன்றை நிறுவுவதற்க்காக இன்று அஹிம்சா நிறுவத்தின் தலைவர் வி.விசயராஜா, தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தலைவர் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் Dr.லிமலநாதன்,அஹிம்சா நிறுவன செயலாளர் த.வசந்தராஜா,உப தலைவர் ராஜ்மோகன், உப செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாவு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் ஜனாப். ஹமீம், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், தொழிநூட்ப உத்தியோகத்தர்,சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ,சுகாதர திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

Post Comment