இலங்கையின் நல்லிணக்கத்தை நோர்வே பிரதமர் வரவேற்றுள்ளார்

நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக், இலங்கையின் நல்லிணக்கமுயற்சிகளை வரவேற்றுள்ளார் என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனநாயக வலுவூட்டல், நல்லாட்சி, பொருளாதார கொள்கை போன்றவை தொடர்பிலும்அவர் வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

ஜூன் 21 ஆம் திகதி முதல் இன்று வரை நோர்வேக்கு விஜயம் செய்திருந்த வெளியுறவுஅமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அந்தநாட்டின் பிரதமர்இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நோர்வேயில் உள்ள இலங்கை சமூகத்தினர் நோர்வேக்கு வழங்கிவரும்அர்ப்பணிப்புக்களையும் அவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.

நோர்வேயின் ராஜாங்க செயலாளர் டோர் ஹெட்ரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுசென்ற நிலையிலேயே இலங்கை வெளியுறவு அமைச்சரின் நோர்வே விஜயமும் அமைந்துள்ளது.

Post Comment