இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின்

மக்களும் முழுமையாக உணரவில்லை, இதன் காரணமாகவே அந்த நாடுகளில் இருந்து முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.

மூன்று தசாப்தபால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என அவர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக இலங்கையில் நிலவும் சமாதானம் குறித்து அந்த மக்களுக்கு எடுத்துச்சொல்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post Comment