நோர்வேயில் பாசையூரை சேரந்த கிரிஸ்துவர் பாதிரியாரின் 06 குழந்தைகள் கடத்தல்

நோர்வேயில் அரசின் குழந்தைகள் பராமரிப்பு துறையினர் யாழ்பாணம் பாசையூரை சொந்த இடமாக உடைய ஒருவரின் 06 குழந்தைகள் நோர்வேயில் கடத்தப்பட்டுள்ளனர்.

நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பு சம்பந்தமாக அரசின் சிறார் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் இலங்கைஇ இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் காணப்படுகின்றன.

இந்த விவகாரம் நோர்வேயின் நீதிமன்றங்கள் வரை சென்று பல குழந்தைகள் அரசின் சிறார் பராமரிப்பு துறையின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் இருக்கின்றன.

நோர்வேயில் இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்கள் இப்படியான நிலைமையை எதிர்நோக்கியிருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் முறையிட்டுவருகின்றனர்.

வளர்ப்பு பெற்றோரிடம் அளிக்கப்படும் குழந்தைகள் தமது தாய்மொழியை கற்கவும் கலாச்சாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தேவையான சூழல் அளிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இலவச சட்டஉதவி வசதியும் உள்ளதாகவும் நோர்வே தெரிவித்துள்ளது.

Post Comment