நோர்வே பிரஜா உரிமை உடைய இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை

நோர்வே நாட்டு இலங்கை தமிழர் நோர்வேயில் தொடர்ந்து வாழலாம் ஆனால் சிரிய நாட்டவர்கள் அல்லது நாம் குறிப்பிடும் நாட்டவர்கள் அங்கு ஒரு பாதுகாப்பான நிலை உருவாகினால் அவர்கள் திரும்ப தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நொர்வெயின் நீதிதுறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். நோர்வே சர்வதேச ஊடாக நிபுணர்களுடனான சந்திப்பில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு கேள்வி எழுப்பிய சேதுவிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் நோர்வே வந்து அகதி அந்தஸ்து பெற்று நோர்வே கடவுச் சிட்டுடன் இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்தாலும் தற்போது அகதிகள் விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால் அவர்கள் மீளவும் வேறு இனத்தவர்களை நாடு கடத்துவது போன்று திரும்ப அனுப்ப படுவார்களா என்று கேட்டபோது அவர்கள் திரும்ப அனுப்ப படமாட்டார்கள் என்று பதிலளித்தார் நோர்வேயின் நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஜேறன் கில்மீர்.

இலங்கை அகதிகள் நோர்வேக்கு 1970ல் வந்தவர்கள். தற்போது நோர்வே நாட்டில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நொர்வே பிரஜா உரிமை உடையவர்கள். அவர்களை நாம் மற்ற நாட்டவர்கள் போன்று திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை. சிரியா நாட்டவர்கள் பல ஆயிரம் என்று வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது தற்காலிக வதிவிட அனுமதி கொடுக்கபடுகிறது. அங்கு யுத்தம் முடிந்தால் திரும்ப போகவேண்டும் என்ற நிபந்தனையில் அது கொடுக்கபடுகிறது.

உலக நாடுகளில் இருந்து நோர்வேக்கு அகதியாக வருவோர் தமது நாட்டில் யுத்தம் முடிந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதும்போது அவர்கள் திரும்பி செல்ல வேண்டும். ஆகத்தகய ஒரு கொள்கையே நாம் வைத்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

எனவே இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கை தற்போது இல்லை. மேலும்இ தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தாலும் அவர்கள் நோர்வேயில் தொடர்ந்து குடியிருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Post Comment