சமாதானப் பேச்சுவார்த்தையின் போது நோர்வே எதிர்நோக்கிய இரு நெருக்கடிகள்.

சமஷ்டி முறையை அரவணைத்துக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டிய தயக்கமும் ச்ரிலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐ.தே.கட்சியிடன் கட்சி சார்பற்ற உணர்வுக் குறைவாகக் காணக்கப்பட்டமையும் நோர்வே எதிர்நோக்கிய இரு நெருக்கடிகள்.
என இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது விஷேட தூதுவராக பணியாற்றிய நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

கேள்வி : ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு தாங்கள் எழுதிய கடிதத்தில் அண்மைய பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். ராஜபக்ஷ ஆட்சியைத் தொடர்வதற்கான போராட்டமாக பல வழிகளில் தேர்தல் காணப்பட்டதென நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள், அவர் தோல்வியைடைந்துள்ளார். கடந்த காலத்தைப் பார்ப்பதிலும் பார்க்க எதிர்காலத்தை இபோது இலங்கை பார்க்க முடியுமென்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக உங்கள் விபரிக்க முடியுமா?

அநேகமாக சகல சிங்களவர்களும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக ராஜபக்ஷவுக்கு மதிப்பளித்திருந்தார்கள். 2009இன் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டியதாகவும் அவர்கள் நன்மதிப்புக் கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் பாரிய வாய்ப்பை அவர் விரயமாக்கியிருந்தார். யுத்ததுக்குப் பின்னர் தமிழ் மக்களை பற்றி பிடிக்கும் வாய்ப்பை அவர் வீணாக்கியிருந்தார். அவர்களின் பிரச்சினைகள் எவற்றுக்கும் எதனையும் செய்திருக்கவில்லை. அத்துடன் இனங்கள் மத்தியிலான சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர் முன்னகரவில்லை. அத்துடன் நலிவான நிலையிருந்த முஸ்லிம் சமூகத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் முஸ்லிம் அல்லது தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது இன நெருக்கடிக்கு இறுதித் தீர்ப்பைக் கண்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாட்டிலுள்ள ஏனைய முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது இலகுவானதாக அமையாது. பல்வேறு தடங்கல்கள் காணப்படுகின்றன. ஆயினும் நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். சமாதான நடவடிக்கைகளின் போது இரு பிரதான நெருக்கடிகள் காணப்பட்டன. சமஷ்டி முறைமை முன்வைக்கப்பட்ட போது அதனை அரவணத்துக் கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயக்கத்தை கொண்டிருந்தார். அத்துடன் சுதந்திரக் கட்சி மற்றும் ஜ.தே.கட்சிக்கு இடையில் கட்சிச் சார்பற்ற உணர்வு குறைவாக காணப்பட்டது. இவை இரண்டும் பிரதான நெருக்கடிகளாகும்.

கேள்வி: யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. சிறப்பான மாற்றத்தில் நாடு சென்றுள்ளது. சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. யுத்தத்தில் இடம்பெயர்ந்த பலர் வீடுகளுக்கு திரும்பிச் செல்லக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் தீர்ப்பை வழங்குவதிலும் பார்க்க சர்வதேச ரீதியான ஆதரவைப் பெறுக் கொள்வடஹ்ற்கு இலங்கை உரித்துடையதாக இருப்பது நிரூப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: இலங்கையர் சகலருக்குமே சமாதானம் பாரிய ஆறுதலை கொடுத்திருக்கின்றது என்பதை நான் ஏறுக்கொள்கிறேன். யுத்தத்தின் பின்னரும் கூட சித்திரவதையும் வெள்ளை வானால் காணாமல் போனதும் தொடர்ந்து இருந்தமை துரதிர்ஷ்வசமானது. ஆனால் உண்மையில் இலங்கை இப்போது பொன்னான வாய்ப்பை கொண்டிருக்கிறது. அதன் சொந்த கடுமையான உழைப்பின் மூலம் அதன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் வகிபாகம் சிறப்பான நீதிபதியாக இருககது. ஆனால் அரசாங்கத்திற்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அது உதவியாக அமையும்.
இலங்கையை புதிய பாதையில் வைப்பதற்கு அது உதவியாக அமையும். சர்வதேச அரசியல் பொருளாதார உதவி சிலசமயம் ஆதராவாக அமைய முடியும். ஆயினும் உள்நாட்டவர்களினாலேயே தலைமை வகிபாகத்தை வழங்க முடியும் என்பது தெளிவானதாகும். சகல அதிர்ஷ்டமும் உண்டாக நான் வாழ்த்துகிறேன்.

கேள்வி: இராணுவ நடவடிக்கை இல்லாமல் சமாதானப் பேச்சுகள் ஊடாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியுமென்று நம்புகின்ற நபராக உள்ளீர்கள். நீங்கள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தீர்கள். உண்னையில் இது அடிக்கடி எதிர்மறையானதாக சென்றிருந்தது. கடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் ஏதாவது வித்தியாசமானதாக செய்திருக்க முடியுமா?

பதில்: நேர்மையான விமர்சனங்களையிட்டு நான் முறைப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. நோர்வே போன்ற சமாதான அனுசரணையாளர் கடுமையான ஆய்வை ஏற்றுக் கொள்வது அவசியமாகும். சமாதான நடவடிக்கைகளில் நான் இரு பிரதான நெருக்கடிகள் குறித்து நம்பினேன். சமஷ்டியை அரவணைத்துக்கொள்ளும் பிரபாகரனின் தயக்கம் ஒன்றாகும். அடுத்ததாக சு.க. மற்றும் ஐ.தே.க. மத்தியில் காணப்பட்ட கட்சி சார்பற்ற உணர்வு குறைவாக இருந்த தன்மையாகும்- பிரிட்டிஷ் எமுத்தாளர், மார்க் சோல்ட்டர் விரைவில் ‘உள்நாட்டு யுத்தம் ஒன்றின் முடிவு’ என்ற நூலை வெளியிடவுள்ளார். இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய சகல அனுபவங்களையும். அந்த நூல் உள்ளடக்கியிருக்கும். அந்த நூலிலிருந்து வெளிவரும் விவாதத்தை நான் வரவேற்பேன். வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நாங்கள் எப்போதுமே முயற்சிக்க வேண்டும்.

Post Comment