சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

எரிக் சொல்ஹெய்ம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘To end a civil war’ என்ற தலைப்பில், சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட நோர்வேயின் சமாதான முயற்சிகளை இந்த நூல் விபரிக்கிறது.

மார்க் சோல்ட்டர் (mark salter) என்ற ஆய்வாளர் இந்த நூலை எழுதியுள்ளார்.

சிறிலங்காவில் அமைதியைக் கொண்டு வர எவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை, இந்த நூல் விபரிக்கிறது.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்த நூல் ஆழமாக ஆராய்வதாகவும், இது, அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமைதி முயற்சிக்கும் பாடமாக இருக்கும் என்றும் இதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Comment