மைத்திரி அரசைப் பாராட்டுகிறது நோர்வே!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய தடைகள் வந்தாலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் மிகவும் சிறப்பாக அர்ப்பணிப்போடும் செயற்படுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறேடா லோச்சன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படமைக்கு நோர்வே தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கையின் சகல நடவடிக்கைகளுக்கும் நோர்வே தன்னுடைய காத்திரமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கும் ஒத்தாசை மற்றும் நாட்டில் சமாதானத்தை கொண்டு வருவதற்கு யுத்த காலத்தில் நோர்வே அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Post Comment