யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீபத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி செய்யவுள்ளது.

மயிலிட்டி துறைமுக பிரதேசத்தில் மீளக்குடியமர்தவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவர்களுக்காக சந்தை அடிப்படையிலான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் மூலம் உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் ஐக்கிய நாடுகள் திட்டப் பிரிவின் இலங்கைக்கான பணிப்பாளர், நோர்வே தூதுவர் ஆகியோர் சமீபத்தில் கைச்சாத்திட்டர்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் டொலர் உதவியாக வழங்கப்படும். மொத்தமாக 550 குடும்பங்கள் நன்மை பெறவுள்ளன.

Post Comment