மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்காகவே ஆளும் வர்க்கங்கள் செயற்படுகின்றன. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், இந்திய அரசும் இந்திய மண்ணின் பழங்குடி மக்களை அழித்துக் கனிமவளங்களைக் கொள்ளையடிபதற்கு எதிராக இந்திய மாவோயிஸ்டுக்கள் போராடுவதைக் கேள்வியுற்றிருக்கிறோம். வன்னியில் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் பல்தேசிய நிறுவனங்கள் வெளித்தெரியும்.

திருகோணமலையும், மன்னாரும் இன்று பல்தேசிய வியாபார வெறியர்களிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘நல்லாட்சி அரசு’ என்ற வெளித்தோற்றம் மக்களுக்கானதல்ல. பன்நாட்டு வியாபாரக் கொள்ளையர்களுக்கானது. வன்னிப் படுகொலைகளின் பின்னர் ஆறு வருடங்களாக, ராஜபக்சவைப் பயன்படுத்தி இலங்கையின் தமது நிலைகளை நிறுவிக்கொண்ட மேற்கு நாடுகளின் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் இன்று மைத்திரிபால சிரிசேனவை ஆட்சிபீடத்தில் அமர்த்தியுள்ளன. இலங்கையில் ராஜபக்ச ஏற்படுத்திய வர்த்தச் சுரண்டல் வெளியைப் பாதுகாப்பதே ‘நல்லாட்சி’ என்ற பெயரில் மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள பணி.

ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் நடத்தப்பட்ட நமது காலத்தின் மிகப்பெரும் மனிதப் பேரவலமான வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கை சென்ற அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை இராணுவத்தை அமெரிக்காவில் பணியில் ஈடுபடுத்துமாறு கோத்தாபய ராஜபக்சவிடம் கோரினார். அதனை நிராகரித்த கோத்தாபய இலங்கை இராணுவம் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டால் முஸ்லீம்களின் வாக்கை இழக்க நேரிடும் என்று கூறினார்.

அப்போது ராஜபக்ச குடும்பத்தை அகற்றி தமக்கு வேண்டிய இன்னொருவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முஸ்லீம்களின் வாக்குப் பலத்தைக் சிதைக்க வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது.

அதன் பின்னான காலப்பகுதியில் ராஜபக்ச பாசிஸ்ட்டுகளோடு இணைந்து செயற்பட பொதுபல சேனா உருவாக்கப்பட்டது. பொதுபல சேனாவைத் தோற்றுவித்து வளர்த்ததன் பின்னணியில் நோர்வே அரசு செயற்பட்டது.

அதற்கான முழுமையான ஆதாரங்கள் கீழே:

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் ராஜபக்சவை முழுமையாக முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தி சிரிசேன ஆட்சிக்கு வருவதற்குத் துணை சென்றன.

நோர்வே அரசின் நிதி உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் மியான்மார் பௌத்த பிக்குவும், ரோகிங்கியா இன முஸ்லீம் படுகொலைகளின் பின்னணியில் செயற்படுபாவர்களில் ஒருவருமான வீராது என்ற பயங்கரவாதி ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்.

மியான்மார் பயங்கரவாதி கொழும்பில்

வீராதுவின் 969 என்ற பயங்கரவாத அமைப்பு ராஜபக்சவின் பௌத்த கொலைவெறிக்கும், ஹிட்லரின் கோரத்திற்கும் இணையானது. ஐரோப்பாவில் அமெரிக்க அரசின் கைத்தடியாகப் பயன்படுவது நோர்வே அரசு. இலங்கையில் சமாதானம் என்ற பெயரில் நடத்திய பேச்சுவார்த்தையை இனப்படுகொலை வரை நடத்திச் சென்ற நோர்வே அரசு, பொதுபல சேனாவிற்கு மட்டும் நிதி வழங்கவில்லை. ரோகிங்கியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படும் ராக்கையின் மானிலத்திற்கு நிதி வழங்கும் பிரதான அரசுகளில் நோர்வேயும் ஒன்று.

பௌத்த மத வெறிக்குப் பலியாக்கப்படும் ரோகிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் நிதி உதவி வழங்குவதற்குப் பதிலாக அகதிகளாக வெளியேறும் ரோகிங்யா மக்களைத் தடுப்பதற்காகப் பணம் வழங்குவதாக நோர்வே அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

ஐ.நா வும் நோர்வேயும் அவ்வப்போது ரோகிங்கியா மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக அவ்வப்போது குரல்கொடுப்பது போல நாடகமாடினாலும், நோக்கங்கள் வேறுபட்டவை.

இலங்கையில் மன்னார் எரிவாயு அகழ்விலும், சம்பூரிலும் முதலிடும் பிரஞ்சு நிறுவனமான டோட்டல் எஸ்.ஏ, (TOTAL S.A) பர்மாவில் அதன் எண்ணை வளக் கொள்ளையை நடத்தி வருகிறது.

மியான்மாரில் எரிவாயுவை உற்பத்தி செய்து அதனை தாய்லாந்து வரை கடத்தி விற்பனை செய்து டோட்டல் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் எரிவாயு அகழ்வின் பிரதான மையம் ரக்கையின் மானிலத்திலேயே அமைந்துள்ளது. பல்தேசிய வியாபாரிகளின் எரிவாயுக் கொள்ளைகும் ராக்கைன் மாநிலத்தில் அதிக அளவில் வாழும் முஸ்லீம்களின் படுகொலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

தவிர, சீன அரசு மியான்மாரின் இதே மானிலத்திலிருந்து எரிவாயுவை சீனாவிற்குக் கடத்திச் செல்லும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தது. 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் முடிவுறும் நிலையிலுள்ளது. இத் திட்டத்திற்கு எதிராக மியான்மார் பௌத்த பிக்குகள் போராட்டங்களை நடத்திவந்தனர்.

பொது பல சேனா, 969 இயக்கம், நோர்வே அரசின் நிதி, எரிவாயு அகழ்வு போன்ற அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை. ஆக, பௌத்தத்தின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அரசினதும் அமெரிக்க அரசினதும் பங்கு ஆராயப்பட வேண்டும்.

burmaMuslimsஇந்த நூற்றாண்டில் அதிக அளவில் படுகொலை செய்யப்படும் மக்கள் கூட்டம் ரோகின்கியா இன மக்கள் என ஐ.நா இன் குறிப்பு ஒன்று தெரியப்படுத்துகிறது. மேற்கு ஏகாதிபத்தியங்களின் அடியாளான ஆன் சாங் சுகி இன் ஜனநாயகம் ரோகிங்கியா முஸ்லீம்களைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை கடந்த சில வாரங்களாக நிராயுதபாணிகளான அப்பாவி முஸ்லீம்கள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்படுகின்றனர். அப்பாவிப் பெண்கள் கர்ப்பிணைத் தாய்மார்கள் முதியவர்கள் மூலையில் முடக்கி வைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர்.

ரோகிங்கியா முஸ்லீம்கள் வரலாற்றில் தடம் தெரியாது அழிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு எதிரான போராட்டம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் வர்த்த வெறிக்கு எதிரான போராட்டமாகவும், ஏகாதிபத்தியங்களின் தலையீட்டுக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்.

http://www.sundaytimes.lk/140518/news/french-oil-giant-to-explore-n-e-seas-99592.html

http://reliefweb.int/report/myanmar/norway-provide-additional-nok-10-million-humanitarian-aid-rakhine-state-myanmar

http://burma.total.com/myanmar-en/oil-and-gas-in-myanmar/oil-and-gas-in-myanmar-900130.html

http://www.rfa.org/english/news/myanmar/pipeline-04182013175129.html

Post Comment