தலைவர் பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம்…

பிரபாகரனும், வேறு சிலரும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்ததாக கூறப்பட்டது. அவர்கள் அவ்வாறு வெளியேறியிருக்கலாம். அவர் தப்பிச் சென்று இன்னொரு நாள் போராடலாம் என ஏன் எண்ணவில்லை? என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை…. இவ்வாறு தனது ஆதங்கத்தினை அமெரிக்க தாதுவர் வெளிப்படுத்தினார்.

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வா? அல்லது போர் குற்ற விசாரணையா?

இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக செயற்பட்டிருந்தார். அவர் தனது அனுபவங்களை To End a civil War என்ற நூலில் பகிர்ந்துள்ளார். அந் நூலின் தொகுப்பினைப் படித்து வரும் நீங்கள் போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவ விபரங்களை அறிந்து வருகிறீர்கள்.

இச் சந்தர்ப்பத்தில் இவ் விபரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. அதாவது இலங்கை அரசு போர்க் குற்ற விசாரணைகளை நடத்துவதில் தயக்கம் காட்டுகிறது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வா? அல்லது போர் குற்ற விசாரணையா? என்ற தெரிவிற்குள் தமிழ் மக்களைத் தள்ளியுள்ளது.

எனவே போர்க் குற்ற விசாரணைக்கான தாற்பரியங்களை இத் தருணத்தில் அறிந்து கொள்வது மேலே குறிப்பிட்ட தெரிவுக்கான நியாயங்களைத் தேர்வு செய்ய உதவியாக அமையும். எனவே மிக முக்கியமான அம்சங்கள் இனிமேல் விரிவாக வரும் என்பதால் தவறாது தொடர்ந்து படியுங்கள்.

வன்னி போர் நிலமைகள் குறித்துப் பார்ப்பின் 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சர்வதேச அழுத்தங்கள் காரணமாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என புதுக்குடியிருப்பிலிருந்த புலிகளின் இடங்களில் நடத்திய தாக்குதல்களின் காணொளிகளின் பின்னணியில் தொலைக்காட்சியில் அரசு அறிவித்தது.

அரசினால் ‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் பணிபுரிந்த வைத்திய அதிகாரி ஒருவர் அன்றைய தினமே மிக மோசமான நாள் என வர்ணித்திருந்தார். வெள்ளை பொஸ்பரஸ் (White Phosphorous) என்ற இரசாயனக் கலவைகளைக்கொண்ட குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக அதிகமானவர்கள் மிக மோசமான காயங்களை அடைந்தனர். இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதாயின் மயக்க மருந்து தேவைப்படும்.

ஆனால் அவை புலிகளின் கைகளில் கிடைத்துவிடும் எனக் கூறி அரசு தடுத்திருந்தது. இதனால் பலர் மரணமாகினர். பாதுகாப்பு பிரதேசம் என அழைக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் அதாவது மார்ச் 10ம் திகதி 124பேர் மரணமானார்கள். 180பேர் காணமடைந்தார்கள். இதில் 59பேர் சிறுவர்களாகும் என செய்திகள் வெளியாகின.

navanethem-pillay-2009-12-8-8-41-40 நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் navanethem pillay 2009 12 8 8 41 40வன்னிப் போரின் மற்றொரு செய்தி மார்ச் 13ம் திகதி வெளியாகியது. அதாவது அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பகுதிக்குள் மிக அதிகமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அப்போதைய ஐ நா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை அவர்களின் அறிக்கை அதனை உறுதி செய்தது.

அவரது அறிக்கையில் பல்வேறு நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி முதல் மார்ச் வரையான காலப் பகுதியில் சுமார் 2800 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளதாகவும், 7000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் இதில் 2/3 பகுதியினர் பாதுகாப்பு வலையத்திற்குள் மரணமடைந்தார்கள் எனவும், இம் மரணங்கள் கனரக ஆயுதங்களால் சம்பவித்தன எனவும் அறிக்கையில் தெரிவித்தார்.

பெப்ரவரி 24ம் திகதி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என அறிவித்த பின்னர் 500 இற்கு அதிகமானவர்கள் மரணித்தும், 1000இற்கு அதிகமானோர் அப் பகுதியில் காயமடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்டோர் விபரம் குறித்து ஐ நா இற்குள் சர்ச்சை மரணமடைந்தோர், காயமடைந்தோர் பற்றிய விபரங்களை அரசு மறுத்தது. ராணுவத்தின் பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போதும், போரில் சிக்குண்ட மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிகளின்போதும் அங்கு எதுவித மரணங்களும் ஏற்படவில்லை என அரசு தரப்புக் கூறியது.

இதனால் மார்ச் 13ம் திகதிய நவனிதம்பிள்ளை அவர்களின் புள்ளி விபரங்கள் நம்பிக்கை தருவன அல்ல எனவும், எனவே ஐ நா இலங்கைக் கிளை அவற்றை உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்கக்கூடாது என குரல்கள் எழுந்தன. உதாரணமாக ஆணையாளர் நவனீதம்பிள்ளை தமது அறிக்கையை மார்ச் 13ம் திகதி வெளியிடுவதற்கு முன்னர் ஐ நா செயலாளர் பான் கி மூன் அவர்களின் மந்திரி சபையிலுள்ள பிரதம அதிகாரி விஜய் நம்பியார் மின் அஞ்சல் ஒன்றினை ஆணையாளருக்கு அனுப்பியிருந்தார்.

அதில் ஆணையாளரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டால் அரசியல் மற்றும் சட்ட நெருக்கடிகள் தம்மைப் போன்ற சிலருக்கு ஏற்படலாமென்பதால் அவற்றைக் கவனத்தில் கொண்டு இறுதி அறிக்கையைத் தயாரிக்குமாறு கோரியிருந்தார்.

pokalamma நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் pokalamma(UN Nations humanitarian chief John Holmes (R) walks with Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama as he arrives to address a press conference in Colombo on February 19, 2009.)

இக் கடிதத்தில் ஐ நா வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் (Neil Buhne) மற்றும் ஐ நா உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் (John Holmes) ஆகியோரும் இப் புள்ளி விபரங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு அண்ணளவு விபரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். இப் புள்ளி விபரங்கள் மிகவும் சரியானவை எனத் தெரிவித்தால் அவற்றை மிகவும் நம்பிக்கையோடு முன்வைப்பது கடினம் என்பது ஜோன் ஹோம்ஸ் (John Holmes) இன் கருத்தாக இருந்தது.

இவ்வாறு நடைபெற்ற விவாதங்களுக்கு மத்தியிலும் நவனீதம்பிள்ளை அப் புள்ளி விபரங்களை வெளியிட்டார். இவ் அறிக்கையில் புலிகள் குறித்து அவர் தனது அவதானிப்பை வெளியிடத் தவறவில்லை. பொது மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுவது, தப்பிச் செல்ல முயற்சித்தோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது, பொது மக்களையும், சிறுவர்களையும் கட்டாயப் பயிற்சிக்கு ஈடுபடுத்துவது போன்றவற்றை மனிதாபிமானமற்ற செயல்கள் என வர்ணித்தார்.

அது மட்டுமல்லாமல் இவை போர்க் குற்றங்களா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் போர் இந்த விதத்தில் தொடருமாயின் ஏற்படக்கூடிய அவலங்களைக் கருத்தில் கொண்டு இரு தரப்பாரும் போரை உடனடியாக ஒத்தி வைத்து கடல் மற்றும் தரை வழியாக மக்கள் வெளியேற உதவ வேண்டும் என்றார். ஆணையாளரின் அறிக்கையையிட்டு தாம் ஏமாற்றமடைவதாகவும், ஆச்சரியமடைந்ததாகவும் இலங்கையின் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித நேய அடிப்படையில் காப்பாற்ற எடுத்த முயற்சி

பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் கடல் வழியாக போரில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கும் யோசனை கூட்டுத் தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அமெரிக்க மாநிலமான ஹவாய் இல் அமைந்துள்ள அமெரிக்க பசுபிக் கட்டளைத் தலைமையக அதிகாரி பெப்ரவரி இறுதிப் பகுதியில் இலங்கை வந்து அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தார்.

இலங்கை அரசு ஆரம்பத்தில் இதற்குச் சம்மதமாக செயற்பட்ட போதிலும் மார்ச் நடுப் பகுதியில் போரில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்ற சர்வதேச சக்திகளை அனுமதிக்க முடியாது என வெளியறவு அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார். இந் நடவடிக்கைகளின் போது புலிகளுடனான தொடர்பினை நோர்வே தரப்பினரே வைத்திருந்தனர். கூட்டுத் தலைமை நாடுகளில் உள்ள அமெரிக்கா, இலங்கை அரசுடன் தனது தொடர்புகளை இறுக்கியது. நாட்கள் செல்லச் செல்ல அமெரிக்கா மிகவும் காட்டமாகப் பேசத் தொடங்கியது.

basil நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் basil

அமெரிக்க மார்ச் மாத தூதரக அறிக்கையின் பிரகாரம் பார்க்கையில் வன்னி நிலவரம் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் ஆலோசிப்பதற்கென அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் ( Robert Blake) அமைச்சர் போகொல்லாகம ஆகியோர் அடிக்கடி சந்தித்துப் பேசினர்.

அப்போது பாதுகாப்பு வலையங்களுக்குள் குண்டுகள் வீசப்படவில்லை என அமைச்சர் வாதாடியபோது அது உண்மை அல்ல என தூதுவர் வாதாடினார். புலிகள் பொது மக்களைத் துன்புறுத்தும் விபரங்களும் வெளியாகின. புதுமாத்தளன் பகுதியின் வடக்குப் புறத்தில் ராணுவ முகாம் அமைந்திருந்தது.

கடற் பகுதிக்கு அண்மையில் புலிகள் பாதுகாப்பு தரிப்பிடங்களை அமைத்து மக்கள் கடல் வழியாக வரும்போது அவர்களைச் சுற்றிவழைத்து ஆண்களை, திருமணமாகாதவர்களை, சிறுவர்களைப் பலவந்தமாக கடத்திச் சென்றதோடு ஏனையோரை பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தினர். மறுத்தவர்கள் அடி வாங்கினர்.

மக்களைக் காப்பாற்ற அமெரிக்க திட்டம் – றொபேர்ட் பிளேக்

….ஒரு சந்தர்ப்பத்தில் நாம் நோர்வேயை விட கூடிய கவனத்தில் ஈடுபட்டோம். மனித உரிமை குறித்து அரசுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தோம். நான் கண்காணிப்பக் குழுத் தலைவர் ரோ ஹற்றம் (Tore Hattrem) தூதுவர் ஹன்ஸ் பிறற்ஸ்கர் ( Hans Brattskar ) என்போருடன் மிக நெருங்கிச் செயற்பட்டேன். போர் முடியும் தறுவாயில் ரோ ஹற்றம், நீல் பூன், செஞ்சிலுவைச் சங்க உயர் அதிகாரி என்னுடன் சேர்த்து நால்வர் இணைந்து செயற்பட்டோம்.

நாம் நால்வரும் கோதபய, பஸில் ஆகியோருடன் இணைந்து சென்றே பேசினோம். எமது அழுத்தம் சாமான்ய மக்களின் அவலங்கள் குறித்தே இருந்தது. புலிகளின் பொறுப்புக் குறித்து நாம் மிகவும் நிதானித்தே பேசினோம். போரை ஒட்டு மொத்தமாக நிறுத்தும்படி எம்மால் கோர முடியவில்லை. அவ்வாறு கேட்பது சரியுமல்ல.

புலிகளுக்கு எதிராக அரசு போரை நடத்துவது நியாயமானது. அதே வேளை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வது அவசியம். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கை அரசு அவ்வாறே நடந்துள்ளது. ஐ நா அதிகாரிகள் அங்கிருந்து விலகுவது என்பது அச்சுறுத்தல் நிலமைகளை அதிகரிக்கும் என்பதால் பல தொண்டர் நிறுவனங்கள் மக்களைத் துன்பத்தில் தள்ளி அங்கிருந்து விலகிச் செல்ல விரும்பவில்லை.

ஏனெனில் பல தமிழ் அதிகாரிகள் தமது குடும்பத்தினரை விட்டுச் செல்ல விரும்பவில்லை. கோதபய, பஸில், ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தோம். நோர்வே தரப்பினர் புலிகளுடன் தொடர்பில் இருந்தனர். எமது பாரிய முயற்சி எனக் கூறின் சிக்குண்ட மக்களை அமெரிக்க கப்பலில் ஏற்றி கரை சேர்ப்பதாகும். நானும், ஏரிக் சோல்கெய்ம் இணைந்து அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதியுடன் ராணுவ அதிகாரிகளைப் பேச வைத்தோம்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்தும் ஏன் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சிக்கவில்லை?- றொபேர்ட் பிளேக் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 49) -சிவலிங்கம் 625

இதன் பிரகாரம் கரை செல்லும் படகுகளில் அவர்களை ஏற்றுவது எனவும், இவற்றை அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என செஞ்சிலுவைச் சங்கம் மேற்பார்வை செய்து உறுதி அளிக்கும் எனவும் அதனைத் தொடர்ந்து கடலில் தரித்துள்ள இலங்கைக் கப்பலில் ஏற்றுவது எனவும் பின்னர் தெற்கில் இறங்கி வழமையான சோதனைகளின் பின்னர் விடுவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இன்னனொரு சிக்கல் இருந்தது. அதாவது பல ஆயிரம் பேர் காயப்பட்டு இருந்தனர். இவை பற்றிப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் நான், எரிக் சோல்கெய்ம் ஆகிய இருவரும் அம் மக்களை பிணையாளிகளாக பயன்படுத்த எண்ணுவதாக கோதபய கூறினார். அதாவது நாம் திரும்பவும் நொர்வேயின் அனுசரணையுடன் புதிய சமாதான முயற்சிக்குத் தயாராவதாக அவர் கருதினார். அதனால் அவ்வாறான ஏற்பாட்டை கோதபய விரும்பவில்லை. ராணுவ வழியில் சகலதையும் முடித்து வைக்க அவர் விரும்பினார்.

நாம் இறுதி வரை ராஜதந்திர வழிகளில் தீர்க்க முனைந்தோம். நாம் புலிகள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை. தாமாக வெளியேற விரும்பின் அதற்கு நாம் அனுமதித்தோம்.

பிரபாகரனும், வேறு சிலரும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருந்ததாக கூறப்பட்டது. அவர்கள் அவ்வாறு வெளியேறியிருக்கலாம். அவர் தப்பிச் சென்று இன்னொரு நாள் போராடலாம் என ஏன் எண்ணவில்லை? என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை….

இவ்வாறு தனது ஆதங்கத்தினை அமெரிக்க தாதுவர் வெளிப்படுத்தினார்.

Post Comment