இலங்கையின் புதிய நோர்வே தூதுவர், சுற்றாடல் துறை அமைச்சரை சந்திக்கின்றார்

இலங்கையின் புதிய நோர்வே தூதுவரான திருமதி கிரேட் லோசன் அவர்கள் (Ms. Grete Lochen)   இன்று காலை சுற்றாடல் துறை அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாபா  அவர்களை சந்தித்தார்.

இலங்கையின் புதிய நோர்வே தூதுவராக நியமனம் பெற்றதன் பின்னர், முதல் முறையாக அவர் சுற்றாடல் அமைச்சிற்கு இன்று வருகை தந்தார்.(2012.12.11 )

alt

 

 

அதன் போது எரிசக்தி உற்பத்திக்காக சுற்றாடலுக்கு நன்மைபயக்கும் முறைமையான மீளவுயிர்ப்பிக்கும் எரிசக்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டின் பொருட்டு நோர்வே அரசாங்கத்தின் உதவி, எதிர் காலத்தில் மேலும் கிடைக்குமெனவும், அதன் போது தூதுவர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பிரதி தூதுவர் திரு. ஜோன் ஒடோ ப்ரோடோல்ட் அவர்கள், (Mr.Jon Otto Brodholt) சுற்றாடல் அமைச்சின் மேலதிகச்செயலாளர் ஆர்.ஏ.ஆர்.ஆர்.ரூபசிங்க, மேலதிகச்செயலாளர்   காமினி கமகே, மத்திய சுற்றாடல் அதிகார  சபையின் தலைவர் விமல் ரூபசிங்க, புவிச் சரிதவியல், அளவை சுரங்கப்பணியகத்தின் தலைவர் கலாநிதி விஜயானந்த ஸஹ்ஹேஸேங்ஹசேஹேரத்ஹேரத் அவர்கள், வனப்பாதுகாப்பு நாயகம் கே.பீ.ஆரியதாஸ ஆகியோர் இச் சந்தர்ப்பத்தில் பங்குபற்றியிருந்தனர்.

Post Comment