மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நோர்வே அரசாங்கம் உதவி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் பிரதேசங்களில் உள்ள மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதிஉதவி வழங்கவுள்ளது.

 

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி பிரிவுக்கான பணிப்பாளர் ராஜேந்திரகுமார் கணேசராஜா மற்றும் இலங்கைக்கான நோர்வே துதுவர் வித்ய பெரேரா ஆகியோர் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

 

வடபகுதி மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நோர்வே 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மயிலிட்டி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

 

இந்த கூட்டு செயற்பாட்டின் கீழ் இலங்கைக்கு நோர்வே அரசாங்கம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்திக்கு சந்தை அடிப்படையிலான கால்நடை வளர்ப்புக்கு உதவி செய்யவுள்ளது. இதன்மூலம் 550 குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் இதன் மூலம் நேரடியாக நன்மையடையவுள்ளனர்.

Post Comment