நோர்வே பிர­யோக விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கு­மி­டையில் உடன்­ப­டிக்கை கைச்­சாத்து

மேற்கு நோர்வே பிர­யோக விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும், யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கு­மி­டையில், இரு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் துணை வேந்­தர்­க­ளினால் இணை ஆய்வு மற்றும் கற்றல் செயற்­பா­டு­க­ளுக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று கடந்த மார்ச் மாதம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில், மேற்கு நோர்வே பிர­யோக விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­க­மா­னது, யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் நேற்று தூய­சக்தி தொழில்­நுட்ப உதவி சம்­பந்­த­மான உடன்­ப­டிக்கை ஒன்றில் நோர்வே தூதுவர்  தூர்­பியோர்ன் கௌஸ்­டாட்­சாதர்  முன்­னி­லையில் கைச்­சாத்­திட்­டுள்­ளது.

இந்த உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டை யில், தூய­சக்தி தொழில்­நுட்பம் சம்­பந்­தமாக மாண­வர்கள், ஆய்­வா­ளர்கள் மத்­தியில் அறிவை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவும், நோர்வே மற்றும் இலங்கை தனியார் நிறு­வ­னங்­க­ளையும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளையும் கொண்ட ஒரு ஆய்வு குழுவை உரு­வாக்­கும்­ மு­க­மா­கவும், நோர்வே தூது­வா­ரா­ல­யத்­தினால் மூன்று வரு­டங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள உத­வியின் உத்­தேச மதிப்­பீடு 112 மில்­லியன் ரூபாய்கள் ஆகும். நோர்வே தூதுவர் கௌஸ்­டாட்­சாதர் இவ்­வு­டன்­ப­டிக்­கை­ பற்றி கருத்துத் தெரி­விக்­கையில், இந்த தூய­சக்தி தொழில்­நுட்ப உதவி சம்­பந்­த­மான உடன்­ப­டிக்­கை­யா­னது, இலங்­கையில் தூய­சக்தி பற்­றிய நிலைத்து நிற்­கக்­ கூ­டிய தீர்­வு­களை உரு­வாக்­கு­வ­தற்­கான புதிய திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுப்­பு­க­ளையும் கொண்­டு­ வரும் என நம்­பு­கி­றேன் என்றார்.

உத­வி ­தொ­கையின் ஒரு பகுதி யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் விஞ்­ஞான, தொழில்­நுட்ப மற்றும் பொறி­யியல் துறை ஆய்­வு­கூ­டங்­களை மேம்­ப­டுத்­தவும் உதவும். நோர்­வே­யானது, இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்கள் மற்றும் தனியார் துறை­யினர் இணைந்த ஒரு ஆய்­வுக்­கு­ழுவை உரு­வாக்­கு­வது இந்த செயற் ­திட்­டத்தின் ஒரு முக்­கிய கூறு ஆகும். தூய­சக்தி தொழிற்நுட்­ப­த்திற்கு நோர்­வேயில் மிகவும் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­ட­ நி­லையில், இத்­தொ­ழில்­நுட்­பத்தில் மேல­திக கவனம் செலுத்­தப்­பட்டு, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் தனி­யார்­து­றைக்­கு­மி­டையில் தொடர்­புகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தன்­ மூலம் புதிய தொழில்­ நுட்­பங்­க­ளுக்கும் முத­லீ­டு­க­ளுக்கும் அடி­கோ­ல­லா­மென நோர்வே கரு­து­கி­றது.

இந்த செயற்­றிட்­டத்­தின்­ மூலம் நோர்வே, இலங்கை தனி­யார்­து­றை­யினர், பல்­கலைக் ­க­ழக சமூ­கத்­திற்கு, உத­வி­களையும், ஆலோ­ச­

னை­க­ளையும் தொழில் அனு­ப­வங்­ளைப்­ பெற வாய்ப்பு­களையும் வழங்கி, தமது பங்­க­ளிப்பை ஆற்­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  நோர்வே தூது­வ­ரா­ல­யத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள இந்த உத­வி­யா­னது, ஏற்­க­னவே நோர்­வே­ நூர்பார்ட் திட்­டத்­தின் கீழ் செயற்

பட்­டு­வரும் இரு பல்­க­லைக்­க­ழ­கங்­களின்

மாண­வர்கள், ஆள­ணி­யினர் மத்­தி­யி­லான இணை­ ஆய்வு, அறிவு மேம்­பாடு பற்­றிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு உறுதி சேர்க்கும். 2017 தொடக்கம் 2021 வரை நடைமுறையிலிருக்கும், இந்த திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபாய்கள் உதவியை நூர்பார்ட் திட்டம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், மேலும் நோர்வேயைச் சேர்ந்த பேர்கன் பல்கலைக்கழகம், அக்டர் பல்கலைக்கழகம், இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கோயம்பத்தூர் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம் என்பன இணைக்கப் பட்டுள்ளன.

Post Comment