மாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன்

வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. அந்த வகையில் துருக்கி நாட்டின் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெறது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ருனியா ஒஷ்ரு ஹாடார் பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டார்.

இதனை சிறுவர் இராஜாங்க அமைச்சு, மற்றும் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகம் இதற்கான எற்பாட்டினை செய்துள்ளது.

இதற்காக 90 மில்லியன் ரூபாவினை இவ் மாணவர்களுக்கான துருக்கி அரசாங்கம் வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post Comment