யாழில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான செயலமர்வு

யாழில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் கண்காட்சி என்பன இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் முதலாவதாக ஏற்றுமதி உற்பத்திகள் கண்காட்சியினை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம.

சிறுவர்விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் , பிரதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க , வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மாலை வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கை ஏற்றுமதி சபை அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Comment