தொல்புரம் மென்பந்து சுற்றுப்போட்டி – விஐயகலா மகேஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்

அமரர். கோணஸ்வரன் சுஜிவன் அவர்களின் நினைவாக தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி 19.03.2017 அன்று வட்டுக்கோட்டைத்தொகுதி பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியால மைதானத்தில் அம்பாள் விளையாட்டு கழக தலைவர் நிரோஜன் தலைமையில் நடைபெற்றது.

இவ் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைப்பதற்காக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டு இவ் சுற்றுப்போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன், ஏதிர்கால இளைய மத்தியில் விளையாட்டு துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்ததுடன் எமது இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கழகங்களிடம் இருந்து போதியளவு வசதிகள் இல்லை என்றும் தெரிவித்த அவர் அதேபோன்று கழகங்களை முன்னேடுக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவர் விக்ரோரியா கழக அணிக்கும் கொக்குவில் பொற்பதி விளையாட்டு கழகங்களும் இவ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

87 புள்ளிகளை கொக்குவில் பொற்பதி விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டன. 76 புள்ளிகளை சிறுவர் விக்ரோரியா கழக பெற்றுக்கொண்டனர். இதில் கொக்குவில் பொற்பதி விளையாட்டு கழகம் வெற்றியினை பெற்றுக்கொண்டனர்.

33 கழகங்கள் கலந்துகொண்டு இதில் இறுதி சுற்றுக்கு இவ் இரு அணிகளும் பங்குபற்றிக்கொண்டனர்.

இதனை யாழ் மாவட்டத்தில் உள்ள கழகங்களின் உள்ள இளைஞர், யுவதிகளின் திறன் விளையாட்டுகளை மேன்படுத்தும் வகையில் இவ் செயற்றிட்டத்தினை அமரர் கோணஸ்வரன் சுஜிவன் அவர்களின் நினைவாக இவ் மென் சுற்றுப்போட்டியினை முன்னேடுத்துள்ளனர்.

கொக்குவில் பொற்பதி விளையாட்டு கழகத்திற்கு இதன் நினைவுச்சின்னத்தினை சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வழங்கிவைத்தார்.

இங்குஅமைச்சின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Post Comment