போருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு!

போருக்கு பின்னர் தமிழரின் கலை, கலாசாரம் மழுங்கடிக்கப்படுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமராட்சி பருத்தித்துறை கலாசார மத்திய நிலைய திறப்பு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் அங்கு மேலும் தெரி விக்கையில்,

போருக்கு முன்னர் எங்களுடைய கலை கலாசாரம் எப்படி பேணி காதுகாக்கப்பட்டு இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால் போருக்கு பின்னர் எங்களுடைய கலை கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.
ஆலயங்களில் உள்ள சிலைகளை உடைத்துக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
கோவில்கள் உடைக்கப்பட்டு இருக்கின் றது. இன்னும் எத்தனையோ கோவில்கள் பூட்டப்பட்ட நிலையில் விளக்கு எரியாத நிலையில் உள்ளன.

இது எங்களுடைய கலை கலாசாரத்தை வளர்க்கின்ற விடயத்தில் பாரிய இலக்காக இருக்கின்றது. தமிழருடைய கலை கலாசாரத்தி ற்கு யுத்தத்திற்கு பின்னர் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் கடந்த மாதம் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தன. யாழ்.மாவட்டத்திலும் சரி கிளிநொச்சி மாவட்டத்திலும் சரி இப்படியான கலாசார சீரழிவுகள் நடந்து கொண்டு வந்தன. ஆனால் அவை தற் காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

Post Comment