தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது-விஜயகலா மகேஸ்வரன்

தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது. நல்லாட்சியில் தமிழிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் வெளிப்பாடு இது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சீலர் அலுவலம் யாழ் மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டவேளையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழில் தேசிய கீதம் பாடும்போது எமது இதயம் குளிர்கின்றது. நல்லாட்சியில் தமிழிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தின் வெளிப்பாடுகளே இவை. இன்று யாழில் திறக்கப்பட்ட இந்த அலுவலகம் கடந்த 20 வருடங்களின் முன்னர் திறக்கப்பட்டிருந்தால் யுத்தமே நிகழ்ந்திருக்காது. அன்றைய நாளில் வடக்கு , கிழக்கு மாகாணங்கிளல் இருந்து இச் செயலகத்திற்காக கொழும்பு சென்ற பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த அரசோ அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதிலேயே ஈடுபட்டது . நல்லாட்சி அரசு மக்களின் தேவை அறிந்து அலுவலகங்களைக் கட்டுகின்றது. இதேவேளை யாழில் இந்தியத் துணைத் தூதரகமும் சுவிஸ் நாட்டின் துணைத் தூதரகங்களும் தற்போது உள்ளன. இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும் கனடா நாட்டினதும் தூதரகங்களும் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கு எங்கள் வெளியுறவு அமைச்சர் ஆவண செய்து அதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.

Post Comment