கிளிநொச்சி கரைச்சி ஆலயம், மாதர்சங்கம், சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட , ஆலயம், மாதர்சங்கம், விளையாட்டுக்கழகம் மற்றும் சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் 2016ம் ஆண்டுக்கான பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள் வழங்கப்பட்டது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மக்களின் நிலைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், மேற்கொள்ளப்பட கூடிய விடயங்கள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேலும், மக்களின் தேவைகளை இனங்கண்டு, கிராமங்கள்தோறும் அபிவிருத்தி செய்ய உள்ளதாக அவர் மக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி நல்லாட்சி அரசாங்கத்தில் இளைஞர் யுவதிகள் இராணுவ அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக நடமாடும் சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயகலா, கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களை போலல்லாது தனிநபர், மாற்று திறனாளிகள் அனைவருக்கும் அவை கிடைக்கும் வகையில் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்கான அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்பாளர் ரவீந்திரன் துஜீபன் அமைச்சருடன் சமூகமளித்திருந்தார்.

Post Comment