கிளிநொச்சி வர்த்தகர்களுக்காக 100 மில்லியன் பெற்றுக்கொடுத்தார் விஜயகலா மகேஸ்வரன்

screen-shot-2016-09-23-at-13-02-42-172x300கிளிநொச்சி எரிந்தபோது ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற நிலையில் போலித் தமிழ் தேசியம் பேசுவோர் வாய் பொத்தி நிண்றபோது பல போலி தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறித்து அல்லது அவர் தம் உழைப்பு குறித்து எந்த விதமான அக்கறையுமற்ற அரசியல்வாதிகளாக இருந்தபோது ஓடோடி சென்று அரசுக்குள் அவலக்குரல் எழுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இலங்கையின் நிதி அமைச்சர் றவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் றணில் விக்கரமசிங்க ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் இடையே நடந்த பலசுற்று பேச்சுகளை அடுத்து 100 மில்லியன் ரூபாய்களை கிளிநொச்சியில் தீயில் பாதிக்கபட்ட தமிழ் வர்த்தகர்களுக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பெற்று கொடுத்தார்.

இந்த 100 மில்லியன் பணத்தை அதாவது தீயால் பாதிக்கபட்ட வர்த்தகர்களுக்கு நிதந்தரமாக கடைகளை கட்டி கொடுக்கவும் மேலும் ஒரு தொகை பணத்தினை அரசியடம் இருந்து வங்கிகள் ஊடாக கடைகளில் முதலீடுகளை செய்வதற்கு ஏதுவாக இலகுகடன்களை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முயண்றுள்ளதாக தெரியவருகிறது.

screen-shot-2016-09-23-at-13-08-30கிளிநொச்சியில் கடைகள் தீபற்றியபோது கிளிநொச்சிக்கான அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்பாளர் ரவீந்திரன் துஜீபன் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேரடியாக சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நிலமைகளை உடனடியாக அமைச்சர் விஜயகலா ஊடாக கொழும்புக்கு தெரியபடுத்தி வந்தார்.

இன்னும் சில தினங்களில் கிளிநொச்சிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகைதந்து 100 மில்லியன் ரூபாய்களை பங்கீடு செய்வது தொடர்பாக வர்த்தகர்களுக்கு அறிவிப்பார் என்று தெரியவருகிறது.

தீ விபத்தில் பழக்கடைகள் பழக்கடைகள், புடவைக் கடைகள், காலணிக் கடைகள், அழகுசாதன பொருட்கடைகள் போன்ற சிறு வியாபாரிகளின் கடைகள் எரிந்துள்ளன.

screen-shot-2016-09-23-at-13-19-22-259x300இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி முதல் இட்டவர்கள் என்றும் கடைகள் எரிந்ததினால் அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து கதியற்று கலங்கிப் போயிருக்கிறார்கள் என்றும் அவர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி தொகுதி அடங்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 63.96 வீதமான வாக்கு இருந்தும் கிளிநொச்சி நகரத்திற்கு என்று ஒரு தீயணைப்பு வண்டி கூட இல்லை.

போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பசியுடன் வாடுகிறார்கள். உடைந்து போன வீடுகளில் வெய்யிலிலும், மழையிலிலும் ஒதுங்க முடியாது தவிக்கிறார்கள். பாடசாலைகளில் நம் குழந்தைகள் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடிகளில் வதங்குகிறார்கள்.

Post Comment