வடக்கின் கல்வி யுத்தத்தால் வீழ்ச்சி-விஜயகலா

14670795_848821988588670_1094252409228494443_nயுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நேற்றுஇடம்பெற்றதுடன் யூனியன் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட தபால் முத்திரையும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,  2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி ஆசிரியர் கலாசாலை அமைந்துள்ளமையினால் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

14670910_849927338478135_8413759709074799079_n

14670795_848821988588670_1094252409228494443_n

14702488_848821711922031_1612007823047453821_n

14680594_848823668588502_713026360794645373_n

Post Comment