கடவுள்களாக மாறும் காவாலிகள்!! கோவில்களில் அந்தரங்க ஆட்டங்கள்

14368875_552596388278926_6114887702518241481_nதற்போது இந்து ஆலயங்களில் தொடர்ச்சியான கழியாட்ட நிகழ்வுகள் ஈடுபட்டு வரும் காவாலிகள் கூட்டத்தால் பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்து ஆலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனிதமான பொங்கல் நிகழ்வுகளில் இரவு நிகழ்வாக இசைக்குழு போடப்பட்டால் இதற்கு என்று ஒரு களியாட்ட காவாலிகள் குழுவினர் மது போதையில் தங்களை மறந்து ஆலயம் தோறும் துள்ளிக் குதித்து நடனம் ஆடும் நிகழ்வாக இடம் பெற்று வருவதனால் இவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

இவர்களுக்கு அந்தத்த பகுதி பொலிசார்களும் இவர்களுக்கான தண்டனைகள் வழங்காமல் ஒத்தாசை வழங்குவதனால் இவர்களின் களியாட்டம் அதிகரித்து வருவதனால் ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள் இடைநடுவில் இவர்களின் அட்டகாசம் தாங்கமுடியாமல் வழிபாட்டினை நிறுத்தி வீடு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கெரடமடுபிள்ளையார் ஆலயம் நெடுங்கேணி நொச்சியடி ஐயன் ஆலயம் ஒட்டுசுட்டான் இத்திமடு நாதம்பிரான் ஆலயம். பட்டிக்குடியிருப்பு வீரபத்திரர் ஆலயம் ஆகிய ஆலயங்களின் வராலாற்று சிறப்புக்களும் ஆலய புதுமைகளும் அற்றுப் போகும் நிலைக்கு வெறியாட்டத்தில் ஆடும் இளைஞர் கும்பலினால் புனிததன்மைகளெல்லாம் அடியார்களினால் இழக்கும் தன்மைக்கு நேரிடுகின்றது.

சம்மந்தப்பட்ட மாவட்ட செலகத்திலுள்ள இந்து கலாச்சார அலுவலகமும் பிரதேச செயலகத்திலுள்ள கலாச்சார அதிகாரிகளும் இணைந்து இந்து ஆலயங்களில் நடைபெறுகின்ற உற்சவங்களையும் பூசைகளையும் புனிதமாக தரிசிப்பதற்கு பொலிசார் ஊடாகவும் ஆலய பரிபாலன சபைக்கு ஊடகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்து சமயத்தின் விழுமியங்களை கட்டி எடுப்புவதற்கு ஒத்தாசை வழங்குமாறு புத்திஜீபிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Comment