அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் வன்னியில் அடையாள அட்டை பிறப்பு அத்தாட்சி பத்திரம் வளங்கும் நிகழ்வு

4சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் வன்னியில் அடையாள அட்டை பிறப்பு அத்தாட்சி பத்திரம் வளங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள ஜந்து மாவட்டங்களிலும் 54 532 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாக யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள புள்ளி விபர கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பலரிடம் அடையாள அட்டை மற்றுப் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லை என்று பலரும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த நிலையில் இண்று அனைத்து மக்களுக்கும் அடையாள அட்டை மற்றும் இதர அரச ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 170 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 294 குடும்பங்களும் இந்தப் பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவருகிறது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் செயலாளர் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் கிளிநொச்சிக்கான இணைப்பாளர் ரவீந்திரன் துஜீபன் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமைகளை உடனடியாக அமைச்சர் விஜயகலா ஊடாகக் கொழும்புக்கு தெரியபடுத்தி வந்தார்.

5

3

2

1

Post Comment