இலங்கை கடற்படையினருக்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

இலங்கையின் கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வர மீனவர்கள் இன்று நான்காவது நாளாகவும், தொழில்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இலங்கையின் கடற்படையினர் தம்மீது நடத்திவரும் தாக்குதல்களை கண்டித்தே இந்தபோராட்டம் நடத்தப்படுகிறது.

எனவே தமது பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் உடனடியான தீர்வுகளை அறிவிக்கவேண்டும் என்று இராமேஸ்வர மீனவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை இராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் கடல் உணவுகளின் விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post Comment