குடிநீர்த் தட்டுப்பாட்டினால் 453881 பேர் பாதிப்பு!

171-768x474நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான குடிநீர்த் தட்டுப்பாட்டினால் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றில் இதனை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 181 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கடும் வரட்சி காரணமாக பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட 46 ஆயிரத்து 624 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர்த் தட்டுப்பாடுகளின் காரணமாக நீர் வழங்கல் நடவடிக்கைக்கு 1080 தண்ணீர் தொட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வரட்சியான காலநிலை காரணமாக 20 மாவட்டங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 524 குடும்பங்­களை சேர்ந்த 4 இலட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post Comment