இலங்கை சுதந்திர போக்குவரத்து உழியர் சங்க பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

14522948_10157419949530567_7205290746744552564_n14517400_10157419961555567_1501848493351495336_n14568001_10157419961770567_1278149015704704754_nfb_img_147541249562920161002_12094314571938_1088930454554297_1834488837_o

பல காலமாக உழியர்களின் பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருந்துவந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இதன் ஒரு அங்கமாக ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் இன்று காலை யாழ்பாணம் வருகைதந்த கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அவர்கள் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டார் இங்கு கோண்டாவில் பருத்தித்துறை கிளிநொச்சி மற்றும் காரைநகர் சாலைகளில் இருந்து வருகைதந்த ஸ்ரீலங்கா சிதந்திர போக்குவரத்து உழியர் சங்க உறுபினர்களுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையானது சுதந்திரமாக இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் ஊழியர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எப்பொழுதும் தனது பணி தொடரும் என்றும் இதன் ஒரு அங்கமாக வடக்கில் பலவருட காலமாக செயற்படாமல் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர போக்குவரத்து உழியர் சங்கத்தினை கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக சிறந்த முறையில் இயங்க வைத்து உழியர்களின் பிரச்சனைகளை ஜனாதிபதியின், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பதிக்கப்பட்ட பல ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை பலப்படுத்துவதன் மூலம் மேலும் எமது உழியர்களின் பிரச்சனைகள் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டார்
இந்த கலந்துரையாடல் தொடர்பாக கௌரவ அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையின் பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் என்னுடன் தொடர்ந்து கலந்துரையாடிக்கொண்டுளார் தற்பொழுது ஜனாதிபதியும் போக்குவரத்து அமச்சரும் அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் எமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் இவர்களால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் இதுவரை காலமும் இருந்துவந்த இழுபறி நிலைகளுக்கு தீர்வுகானப்பட்டுவிட்டன நாம் அனைவரும் ஒருநாட்டு மக்கள் பேசுகின்ற மொழி இரண்டாக உள்ளதே தவிர நாம் அனைவரும் ஒருவரே இன்று நீங்கள் என்னிடம் கூறியிருக்கின்ற பிரச்சனைகள் மற்றும் எழுத்து மூலமாக தந்த கோரிக்கைகளுக்கு நிச்சயமாக தீர்வு காணப்படும் நீங்கள் எந்த பிரச்சனை என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக எனக்கு தெரியப்படுத்தினால் அதற்கான தீர்வுகளை கண்டிப்பாக பெற்று தருவேன் எனவும் அவர் உறுதியளித்தார்

Post Comment