இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச மண்டபத்தில் 30.09.2016 பிற்பகல் 06 மணிக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் மற்றும் இலங்கை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

14494721_10210802664332119_8746281789353502011_nமகிந்த அரசாங்கம் தமிழ் ஆயுதகுழு உறுப்பினர்களையும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களையும் மட்டும் கடந்த 12 வருடமாக நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடைமொழிக்குள் சந்தித்து கலந்துரையாடி வந்தனர்.

நோர்வேக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வந்திருந்தபோது இந்த விடயம் உரிய முறையில் நோர்வே வெளிநாட்டு அமைச்சுக்கு சுட்டிக்காட்டபட்டிருந்ததுடன் குறித்த தமிழ் வன்முறை கும்பலே தமது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று நோர்வேயில் இருக்கும் இலங்கை தூதுவராலயம் நோர்வே வெளிநாட்டு அமைச்சுக்கு பட்டியலும் கொடுத்து அவர்களை மங்கள சமரவீரவை சந்திக்க வருமாறு கோரி இரந்தது.

இந்த விடயமும் பல்வேறு தரப்பினருக்கு சுட்டிக்காட்ட நிலையில் இலங்கை அரசு தனது முதலாவது புலம்பெயர்ந்த தமிழர்களுடனான சந்திப்பை நோர்வேயில் ஆரம்பித்துள்ளதுடன் குறித்த சந்திப்பிற்கு நோர்வேயிலும் வாழும் தமிழ் , சிங்கள , முஸ்லீம் கல்விமான்கள் சட்டதரனிகள் , ஊடகத்துறையினர் மருத்துவதுறையினர் , பொறியில்துறையினர் , வர்த்தகதுறையினர் என்று பல்வேறுபட்ட துறைசார் புலம்பெயர்ந்தவர்களை அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

சும்மார் 200 வரையான முற்று முழுதாக எந்த ஒரு அரசியல் பாகபாடும் காட்டாது நல்லாட்சியால் நோர்வேயில் இலங்கை நாட்டின் புலம்பெயர்ந்தவர்களுடனான முதலாவது சந்திப்பு நடைபெற்றது.

நோர்வேக்கான இலங்கை தூதுவரின் உரை ஆங்கிலத்தில் ( ஏனய தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்வை தெரியபடுத்துமாறு அவர் பகிரங்கமாக கோரி உள்ளதால் நாம் அவருடைய உரையினை அப்படியே பகிரங்கபடுத்துகின்றோம்).

இந்த சந்திப்பில் இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் உரையாற்றியதுடன் சிறு அறிமுக கலந்துரையாடலும் இடம்பெற்றது.

14469635_10210802666332169_8593168140218846390_nஇதே நேரம் புலம்பெயர்ந்த இலங்கையருடன் பேச்சு நடத்தியதில் எந்த தவறும் கிடையாது.

புலம்பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்-

புலம்பெயர் தமிழர்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்தியதில் எந்த தவறும் கிடையாது.

14440940_10210802666012161_4094979146870114873_nபுலம்பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து வினவப்பட்டது.

அவர்கள் பிரிவினைவாத கோரிக்கையுடையவர்களாக இருந்தால் அவர்களை எமது பக்கம் திருப்ப வேண்டும்.

அதற்கு பேச்சு நடத்துவது பொறுத்தமானதே என்றார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புலம்பெயர் தமிழர்கள; பிரிவினைவாத நோக்குடையவர்கள் என ஒதுக்கிவிட முடியாது.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சு நடத்த வேண்டும் என்றார்.

One thought on “இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

Post Comment