பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக மாணவர்களை வீதியிலே இறக்கி போராட வைக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

14523086_840049296132606_9166686360754759794_nவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த காலத்தில் அலுவலகங்களிலும் வீடுகளிலும் பாலியல் துஸ்பிரயோகங்களோ சிறுவர் துஸ்பிரயோகங்களோ கனவன் மனைவி பிரச்சனைகளோ எதுவும் அற்றதாக ஒழுக்கமான ஒர் பிரதேசமாக வடக்கு மாகாணம் காணப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்நிலமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. என தெரிவித்த சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அத்தகைய நிலமை ஏற்படுத்தப்பட வேண்டியதுடன் அதற்கு பொலிஸ் நிலையங்களை விடவும் நீதிமன்றங்களுக்கே செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கு அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்திருப்பதாவது,

14470661_840049329465936_3141426794368868402_nமாணவர்களின் கல்வி வீணடிக்கப்பட கூடாது.

பாடசாலைக்களுக்கு பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வளவோ கஸ்ரப்பட்டு அனுப்புவது அவர்களது கல்வியை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே. ஆனால் தற்போது வடக்கு கிழக்கிலே யுத்தத்திற்கு முன்னர் இருந்த கல்வி வளர்ச்சியை பார்க்கிலும் யுத்தத்தின் பின்னரான கல்வி வளர்ச்சியானது பின்னடைந்தே சென்றுள்ளது.

மேலும் பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக மாணவர்களை வீதியிலே இறக்கி போராட வைக்க முடியாது என்பதுடன் அதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கவும் மாட்டேன். பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒர் கட்டமைப்பு முறையுள்ளது. ஆசிரியர் அதிபர் வலய மாகாண கல்விப் பணிப்பாளர் அதனையும் தாண்டி மாகாண கலவியமைச்சு மத்திய கல்வியமைச்சு என்று ஒர் கட்டமைப்பு உள்ளது. இதனை விடுத்து மாணவர்கள் வீதியிலே இறக்கி போராட விடுவதும் அரசியல் வாதிகளிடம் செல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

14448923_840049469465922_1908202325300612161_nஇவ்வாறான ஒர் பிரச்சனையே உடுவில் மகளீர் கல்லூரி விடயத்திலும் இடம்பெற்றிருந்தது. இப் பிரச்சனையானது என்னிடம் வந்திருந்த போது நான் தெளிவாக கூறியிருந்தேன், இப் பிரச்சனையில் ஒர் அரசியல்வாதி தலையிட்டு எதாவது நன்மை தீமை இடம்பெறுமாயின் அது பாடசாலையின் எதிர்காலத்தை பாதித்துவிடும் அதனால் தான் நான் இதனை தவிர்த்திருந்தேன். ஆனால் அம் மாணவிகளை ஜனாதிபதியின் காலில் சிரூடையுடன் விழவைத்து மாணவிகளை அவமானப்படுத்தியிருந்ததுடன் அவர்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்படைய செய்திருந்தனர். எனவே தான் நான் குறிப்பிடுகின்றேன் பாடசாலைகளது பிரச்சனைகளின் போது அரசியல்வாதிகள் தலையீடு செய்யக்கூடாது எனவும் மாணவர்கள் வீதியிலே இறங்கி போராடுவதை எந்த அதிபரும் ஆசிரியரும் அனுமதிக்கவும் கூடாது எனவும்.

Post Comment