விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைத்தலைமையின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதியினைப் பெறுவதற்காக அறிக்கையும் திட்ட வரைபினையும் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் முன்மொழிந்தார்.

ஆதன்பின்னர், மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து, நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளூராட்சி, வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.

இந்த கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன், ஈ.சரவணபவன், உட்பட மாகாண சபை அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post Comment