ஜெனீவாவில் வீதி மறியலில் ஈடுபட்ட ஈழத்து இளைஞர்கள்!

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.

இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

புலம்பெயர்ந்துள்ள ஈழத்து இளைஞர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வீதிமறியலில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

மற்றும் தமிழ் தேசியகூட்மைப்பினர்க்கு எதிராகவும் அவர்கள் உருப்படங்கள் கட்டி இழுக்கப்பட்டு அதனை கடைசியில் கிழித்து எறியப்பட்ட்து.. அத்துடன் மகிந்தா, மைத்திரி இன் கொடுபாவிகள் வீதியில் கொண்டு வரப்பட்டு முதலில் மைத்திரி எரிக்கப்படார் ஐநா வீதியில் அதன் போது கலவரம் ஏற்பட்டது பின்னர் மகிந்தவின் கொடும்பாவி எரிக்க எத்தனிக்கும் போது காவல்துறையினர் தடை காரணமாக கடைசியில் மகிந்தா துண்டு துண்டாக பிய்த்து பிய்த்து எறியப்பட்டார்..

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

Post Comment