திலீபனின் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அருகில் நினைவு நாள் அனுஷ்டிப்பு

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து ஈழ மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிர்நீத்த தியாகி திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபன் அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post Comment