டெனிஸ்வரனுக்கு கன்னத்தில் அறைந்த அண்ணாமலை

denis001-300x150இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் வலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கடும் காற்றில் சிக்கி படகும் சேதமடைந்துள்ள நிலையில் தொழில் செய்ய வலைகள் வழங்கி உதவுமாறு கேட்டு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரனை தான் சந்திக்கச் சென்ற போது… ‘தனக்காக இரண்டு நிமிடங்கள் கூட ஒதுக்கி பேசாத அவர், தற்போது ஏசி அறைக்குள் இருந்துகொண்டு 20 நிமிட வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாக’ கடுமையாக சாடியுள்ள வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கைச் சேர்ந்த மூத்த கடலோடியான காத்தலிங்கம் அண்ணாமலை,

மீன்பிடி வலை உதவி கேட்டுச்சென்ற தன்னிடம் மாவீரரான தனது மகனின் மரணத்தை நீரியல் வளத்திணைக்களத்திடம் உறுதிப்படுத்தி வந்தால் 50,000 ரூபாய் பணம் தருவதாக கூறியதும்,

போராளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக டெனிஸ்வரன் ஊடகங்களில் கூவி கூவி விற்பதும், உயிர்த்தியாகங்களை கொச்சைப்படுத்துவது போலவும், பேரம் பேசுவது போலவும் உள்ளது என்றும் அறச்சீற்றம் காட்டினார்.

2009 க்கு முன்னர் சட்டத்தரணியாக பணியாற்றிய டெனிஸ்வரன் எத்தனை போராளிகளின் வழக்குகளில் ஆஜராகி உள்ளார்? என்று கூறுவாரா என்றும் காத்தலிங்கம் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

குளத்து அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே!

போரில் சிக்கி சின்னாபின்னமான ஒரு தேசத்தின் அமைச்சர் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேசத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் துரிதமாக கட்டி எழுப்ப வேண்டிய ஒரு இடத்தில் நின்று கொண்டு போர்க்கால அடிப்படையில் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விட்டு…

நான் கடலுக்கு அமைச்சர் இல்லை ஆறு குளம் ஏரி குட்டைகளுக்கு தான் அமைச்சர் என்று, சொகுசு கார்களுக்குள்ளும் – ஏசி அறைகளுக்குள்ளும் இருந்து வியாக்கியானம் பேசுவதை நிறுத்துங்கள்.

Post Comment