‘ஊழல் பெருஞ்சாலி’ ஐங்கரநேசனின் நிதி மோசடிகள் அம்பலம்!

4835-3-8faac013f5b9abcd08b1a517750400a7வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கார்த்திகை மாதத்தில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை நடப்போவதாக கூறி அதற்கென்று கொள்வனவு செய்யப்பட்ட மரங்களிலும் தனது பாழாய்ப்போன ஊழல் புத்தியை காட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

மா, பலா, கஜீ, மாதுளை, தேசி, தோடை, கொய்யா, தேக்கு, மருதம் என்று பல வகையான மரங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து வகையான மரங்களுக்கும் ‘மரம் ஒன்றுக்கு 160 தொடக்கம் 180 ரூபாய்கள்’ வரை செலவழித்துள்ளதாக வடக்கு மாகாணசபையில் ஐங்கரநேசன் கணக்கு காட்டிள்ளார்.

இதில் முதலமைச்சர் விக்கியையும், ஏனைய மாகாணசபை உறுப்பினர்களையும் ‘ஊழல் பெருஞ்சாலி ஐங்கரநேசன்’ முட்டாளாக்கிய விடயம் என்னவென்றால், வன்னியின் ஆற்றங்கரை – வயல்கரை ஓரங்களிலும், குளங்கள் – குட்டைகள் போன்ற நீர்நிலைகளிலும், நீர்ப்பிடிப்பான இதர இடங்களிலும் தானாகவே செழித்து வளரும் மருத மரத்துக்கு, மரம் ஒன்றுக்கு 180 ரூபாய்கள் படி கணக்கு முடித்துள்ளது தான்.

4835-8-8faac013f5b9abcd08b1a517750400a7இலங்கையில் அதுவும் வடக்கு மாகாணத்தில் மருத மரம் தேடியும் கிடைக்காத அரிதான மரம் அல்ல. வெளவால் போன்ற பறவைகளாலும் மழை வெள்ளம் போன்ற இயற்கை காரணிகளாலும் தன் இஸ்டத்துக்கு பரம்பலடைந்து, பல்கிப்பெருகி ஆற்றங்கரை – வயல்கரை ஓரங்களிலும், குளங்கள் – குட்டைகள் போன்ற நீர்நிலைகளிலும் கும்பல் கும்பலாக முளைக்கும் மரமாகும்.

இத்தகைய இயல்பையுடைய மருத மரத்தை, மரம் ஒன்று 180 ரூபாய்கள் படி எப்படி கொள்வனவு செய்ய முடியும்? இதுதொடர்பில் ஐங்கரநேசனின் வடக்கு மாகாண விவசாய அமைச்சு பகிரங்க கேள்வி கோரல் விடுத்திருந்ததா? விடுக்காதது ஏன்? பணத்தை சுருட்டி தனது சட்டைப்பைக்குள் போடத்தானே.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தான் போகும் இடமெல்லாம் பொது ஜனங்களிடம் தொண்டை கிழிய நல்லாவே நல்லாட்சி தத்துவம் கதைக்கின்றார். ஆனால் அவர் தன்னைச்சுற்றி வைத்திருப்பதோ ஒரு ஊழல் அமைச்சரவை. அந்த ஊழல் அமைச்சரவையை அவர் இப்போதும் கூட பாதுகாத்து பராமரித்தே வருகின்றார். வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் இவர், ‘ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கண்ணே’ எனும் கதையாக வலம் வருகின்றார்.

‘ஊழல் பெருஞ்சாலி ஐங்கரநேசன்’ மரங்கள் கொள்வனவு செய்த நிதி தொடர்பில் வடக்கு மாகாணசபையில் கணக்கு முடித்த பத்திரங்களை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்தும் நெஞ்சுரமும் – நேர்மைத்திறனும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் உண்டா?

Post Comment