கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவுக்கு ஆப்பு செருகிய சேது..!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதிக் கனவை அமெரிக்கா கலைத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளும் உத்தேசத்தில் கடந்த 07ம் திகதி கோத்தபாய அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.

எனினும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாக எந்தவொரு சாதகமான பதிலையும் இதுவரை வழங்கவில்லை என்பதுடன் கோத்தபாய தொடர்பான இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிலளித்துள்ளது.

கோதபாய அமெரிக்கா நாட்டு கடவுச்சீட்டு உடையவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது பாதுகாப்பு அமைச்சு நோர்வே சேதுவை பயங்கரவாதி என்று அவதூறு பரப்பி வந்தது. குறித்த விடயம் ஜரோப்பிய நீதிமண்றம் சென்று சேது தொடர்பாக வெளியாகிய அனைத்தும் அவதூறு பாராதூரமான கொலை அச்சுறுத்தல் குற்றமாக நீதிமண்றம் அறிவித்தது.

இதை நோர்வே சேது அமெரிக்க அரசிடம் பாராபடுத்தினார். விடயம் விபரீதமானது. அமெரிக்க உளவுத்துறை நோர்வே சேதுவின் நீதிமண்ற தீர்ப்பை வைத்து கோதபாய றாஜபக்சவின் அமெரிக்க வீட்டை முற்றுகையிட்டது.

அவருடைய வீட்டில் வசித்து வந்தவர் கோதபாய றாஜபக்ச இலங்கை சென்றுவிட்டதாகவும் அவர் அமெரிக்காவில் இல்லை என்றும் அறிவித்தார். அமெரிக்கா உளவுத்துறை கோதபாய அமெரிக்கா வந்தால் நோர்வே சேதுவின் விடயத்தை விசாரனைக்கு எடுப்பதாக அறிவித்தது.

தற்போது மீண்டும் கோதபாய அமெரிக்க சென்றுள்ளார். நோர்வே சேதுவின் சட்ட ஆவணம் அமெரிக்க அரசால் தூசு தட்டபட்டுள்ளது. அவை தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்ற கோணத்தில் அமெரிக்கா அறிவித்துள்ளது.

கோதபாய அரச தலைவராக மாறவேண்டுமாக இருந்தால் நோர்வே சேதுவை தனது அரசில் வட்டத்திற்குள் கொண்டு வந்து தனத அரசியல் இராணுவ நேரடி பாதுகாப்பில் தன்னிடம் இருந்து சேதுவுக்கு உயர் ஆபத்து இல்லை என்று உலகிற்கு காட்டி வைத்திருப்பதன் ஊடாக அமெரிக்க சட்ட சிக்கலில் இருந்து தப்ப முடியும். இதை மீறி கோதபாய இலங்கை அரச தலைவரானால் கோதபாய ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்வதில் சேதுவின் நீதிமண்ற முடிவால் சட்ட சிக்கல் இருந்து வருகிறது.

அத்துடன் அமெரிக்க குடியுரிமை நீக்கத்துக்கான விண்ணப்பத்தில் கோத்தபாய குறிப்பிட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை ஆராய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.

இதன் காரணமாக கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கத்துக்கான வேண்டுகோள் தற்போதைக்கு சாதகமாக பரீசிலிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Post Comment