இலங்கைக் கடற்பரப்பில் வாழும் உயிரினங்கள் -நோர்வே நிறுவனம் ஆய்வு- காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பம்!!

இலங்கைக் கடற்பரப்பில் எந்த வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தொடர்பான ஆய்வொன்றில் நோர்வே நாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக நோர்வே நாட்டுக் கப்பல் காங்கேசன்துறையில் இருந்து தனது பணியை நேற்று ஆரம்பித்தது.

இலங்கைக்கு உட்பட்ட கடற்பரப்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை வகைப்படுத்தி இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாரா நிறுவன ஏற்பாட்டில் நோர்வே நாட்டு நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொள்கிறது. இதற்காக அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நவீன கப்பல் நோர்வே நாட்டில் இருந்து எடுத்து வரப்பட்டிருந்த்து.

இந்தக் கப்பல் சுமார் 26 தினங்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Post Comment