இறுதிப்போரிற்கென சேகரிக்கப்பட்ட நிதியில் TILKO_HOTEL

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் நிதிசேகரிப்பு பிரிவான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிதி முதலீட்டில் இந்த சொகுசு விடுதி (ஹோட்டல்) கோத்தபாயவின் அனுமதியுடன் கட்டப்பட்டிருந்தது. குறிப்பாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இங்கு பணிகள் கொடுக்கப்படுமெனக்கூறியே இது தொடங்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பணிபுரியும் 125 க்கும் மேற்பட்ட ஊழியர்களில் முன்னாள் போராளிகள் வெறும் ஏழு நபர்களே.
இவர்களுக்கும் போதிய சம்பளம் கொடுக்கப்படுவதில்லையெனவும் அவர்களையும் விலகிச்செல்வதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவருவதும் நடைபெற்றுவருகின்றது.

புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் புள்ளிகள் யாரேனும் இங்கு வந்தால் அவர்கள் சந்திப்புகளை மேற்கொள்ளும் இடமாகவும்,இலங்கைக்கான TCC இன் காரியாலயமாகவும் இந்த உல்லாச விடுதியே செயற்பட்டு வருகிறது.இந்த உல்லாசவிடுதிக்கு TCC இன் நிதி சேகரிப்பாளர்கள் என அடையாளங்காணப்பட்ட கனடாவிலிருந்து
டேவிட் என்பவரும் டென்மார்க்கிலிழுந்து பிரியன் என்பவரும் பிரான்சிலிருந்து பார்த்திபன் என்பவரும் நோர்வேயிலிருந்து முரளி என்பவரும் ஜெர்மனியிலிருந்து சங்கர் என்பவரும்
லண்டனிலிருந்து தனம்,ராஜமனோகரன் மற்றும் ரகு என்பவர்களும் நந்தகோபன் தலைமையில் கடந்தசில மாதங்களுக்கு முன்னர் சந்திப்பொன்றை நடத்திச் சென்றிருந்தனர்.அதில் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளில் சேகரிக்கப்படும் நிதிகளில் அடுத்து இரண்டு உல்லாசவிடுதிகள் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்திலும் அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே இதன் இலாபங்களில் ஒரு தொகையினை குமரன் பத்மநாதனிடம் செஞ்சோலை குழந்தைகள் பராமரிப்பிற்காக வழங்கிவந்தபோதும் ஏனைய தொகைகள் அவரவர் தனிப்பட்ட தேவைகளுக்கே பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உல்லாசவிடுதி கட்டுமானத்தில் தனது தனிப்பட்ட முதலீடுகளும் இடப்பட்டதென்றுகூறி தற்போது அதனை நிர்வகித்துவரும் லண்டனைச்சேர்ந்த திலகராஜா என்பவர் அதனை முற்றாக அபகரிக்க முற்பட்டவேளையில் பிணக்குகளும் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதிவளங்கள் தனிநபர் சொத்துக்களாக மாறிவிட்டதெனும் கசப்பான உண்மைகளை அங்குசென்ற போராளிகள் பலர் தெரிவித்துவரும் வேளையில் இங்கும்
தேசியத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதிவளத்தில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கென
கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி உல்லாசவிடுதி இன்று தனிநபர் சொத்தாக மாற்றமடைந்து வருகிறது.

மாவீரர்களின் தியாகங்களைக்கூறி புலம்பெயர் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட நிதிகளைத்தான் பதுக்கினார்கள் என்றால் தற்போது மீண்டும் முன்னாள் போராளிகளைக்கூறி அவர்களின் வாழ்வாதாரத்திற்கென புலம்பெயர் நாடுகளில் மீண்டும் மக்களை ஏமாற்றி நிதிகளைச் சேகரித்து இங்கு அடுக்குமாடி உல்லாசவிடுதிகளை அமைத்து அதில் இலாபம்தேட முற்பட்டுள்ளார்கள் இந்தக்கொடியவர்கள்.

இல்லையில்லை இது புலம்பெயர் நாட்டிற்கு அகதிதஞ்சம் பெற்றவர் ஒருவர் தனது சொந்த வருமானத்திலே இதனைக் கட்டியுள்ளார் எனில் அதனை வாயைப்பிளந்துகொண்டு நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருப்பது காலக்கொடுமையே.

Post Comment